/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லறைத் தோட்டத்துக்கு இடம்; கிறிஸ்தவ போதகர்கள் மனு
/
கல்லறைத் தோட்டத்துக்கு இடம்; கிறிஸ்தவ போதகர்கள் மனு
கல்லறைத் தோட்டத்துக்கு இடம்; கிறிஸ்தவ போதகர்கள் மனு
கல்லறைத் தோட்டத்துக்கு இடம்; கிறிஸ்தவ போதகர்கள் மனு
ADDED : நவ 14, 2024 11:27 PM

பல்லடம்; கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு, கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள், பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து அனைத்து கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள் அளித்த கோரிக்கை மனு:
பல்லடம் வட்டாரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட திருச்சபைகளை சார்ந்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிக்கிறோம். கிறிஸ்தவ சமூகத்துக்கு என பிரத்யேக கல்லறை தோட்டம் இல்லாத நிலையில், நகர மற்றும் கிராமப்புறங்களில் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம்.
கடந்த, 6ம் தேதி இறந்த கிறிஸ்தவர் ஒருவரின் உடலை நகராட்சி எதிரே உள்ள இடத்தில் அடக்கம் செய்ய சென்றபோது, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசார் முன்னிலையில், வருவாய் துறை அனுமதி பெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனவே, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கல்லறை தோட்டம் அமைக்க அதிகாரிகள் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.