ADDED : பிப் 19, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
உடுமலை: கிறிஸ்துவ தேவாலயங்களில், தவக்காலம் துவக்கத்தை முன்னிட்டு, சாம்பல் புதன் திருப்பலி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தவக்காலம் நேற்று துவங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம், கிறிஸ்துவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் குருத்து ஞாயிறு அன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட சிலுவை அடையாள, குருத்து ஓலையை எரித்து அதை சாம்பல் செய்து திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள், அதனை அர்ச்சித்து அனைவரது நெற்றியிலும், சாம்பலால் சிலுவை அடையாளம் இடுவார்.
சாம்பல் புதனை முன்னிட்டு, உடுமலையிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், சிறப்பு திருப்பலியுடன், 40 நாட்கள் தவக்காலம் நேற்று துவங்கியது.
