/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிறிஸ்துமஸ் விழா பள்ளியில் கொண்டாட்டம்
/
கிறிஸ்துமஸ் விழா பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா ஜூனியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவை, ஆர்.கே.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி துவக்கி வைத்தார். பள்ளியில் குடில் அமைத்து, மாணவர்கள் சான்டா கிளாஸ் உடையணிந்தும், தேவதை உடையணிந்தும் விழாவை சிறப்பித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி செயலர் கார்த்திக்குமார், தலைமையாசிரியர் கோகிலாமணி உள்ளிட்டோர் மாணவ, மாணவியருக்கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

