/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது
/
கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது
ADDED : டிச 25, 2025 05:54 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது; வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சர்ச்களில், நள்ளிரவு திருப்பலி நடத்தப்பட்டது; ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், இன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளையொட்டி, சர்ச்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில், குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் இடம் பெற்றன. வீடுகளிலும், ஸ்டார் தொங்கவிட்டு, குடில் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து, மக்கள் பண்டிகையை வரவேற்றனர்.
நேற்று, நள்ளிரவு, 12:00 மணிக்கு சர்ச்களில், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது; சர்ச் குருக்கள், தலைமையேற்று நடத்தினர். குமரன் ரோடு கத்ரீனாள் சர்ச், குமார் நகர் புனித ஜோசப் சர்ச், பூமலுார் புனித அந்தோணியார் சர்ச், பல்லடம் புனித வேளாங்கண்ணி சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச், லுார்துபுரம் அன்னை சர்ச், குமார் நகர் புனித பால் சர்ச், நல்லுார் யூக்கரிஸ்ட் சர்ச், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, டி.இ.எல்.சி., சர்ச் உட்பட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., மற்றும் பிற சபை சார்ந்த சர்ச்களில் வழிபாடு நடத்தப்பட்டது; சர்ச்களில், ெமழுகுவர்த்தி ஒளியில், வழிபாடு நடத்தப்பட்டது.
கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். இன்று காலையும், சர்ச்களில் திருப்பலி நடத்தப்படும். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு, பலகாரம் வழங்கி மகிழ்ந்தனர்.
சொந்த ஊர் பயணம் வெளியூரில் வசிக்கும் பலர், தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதற்காக, திருப்பூரில் இருந்து, பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

