/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை பொருட்கள் புழக்கம்; கண்காணிப்பு அவசியம்
/
போதை பொருட்கள் புழக்கம்; கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூன் 04, 2025 12:35 AM
உடுமலை:
உடுமலை பகுதியில் பள்ளி அருகே கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் குறித்து, தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்தந்த ஸ்டேஷன் பகுதியில் போதை பொருட்கள் குறித்து கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகள் நேற்றுமுன்தினம் முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால், காலை, மாலை நேரங்களில், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள் அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீப காலமாக, சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் போதை வஸ்து பழக்கத்தால், வாழ்க்கையில் தடம் மாறி வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது நடக்கிறது.
பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை குறித்தும் கண்காணிப்பதோடு, புழக்கத்தில் விடுபவர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணிக்க வேண்டும். இதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.
பள்ளி அருகே மட்டுமல்லாமல், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.