/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்
/
103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற பொதுமக்கள்
ADDED : ஜன 18, 2024 12:26 AM

அவிநாசி : அவிநாசி அருகே 103 வயது நிரம்பிய மூதாட்டியிடம், பொதுமக்கள் ஆசி பெற்றனர்.
அவிநாசி அடுத்த புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி மனைவி மசிரியாத்தாள். இவருக்கு நேற்றுடன் 103 வயது பூர்த்தியானது.
மசிரியாத்தாளின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக புதுப்பாளையத்தில் உள்ள வடக்கால தோட்டத்தில் அவருடைய மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் மற்றும் உறவினர்கள் என கலந்து கொண்ட நுாற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாத பூஜை செய்து அவரிடம் ஆசி பெற்றனர். மசிரியாத்தாளின் பேத்தி, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரிபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.