/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., நிர்வாகியை கண்டித்து சி.ஐ.டி.யு., 'போஸ்டர்'
/
தி.மு.க., நிர்வாகியை கண்டித்து சி.ஐ.டி.யு., 'போஸ்டர்'
தி.மு.க., நிர்வாகியை கண்டித்து சி.ஐ.டி.யு., 'போஸ்டர்'
தி.மு.க., நிர்வாகியை கண்டித்து சி.ஐ.டி.யு., 'போஸ்டர்'
ADDED : நவ 07, 2024 12:08 AM

திருப்பூர்; தாராபுரத்தில் உள்ள மதுக்கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியதாக தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் (சி.ஐ.டி.யு.,) ஊழியர் சங்கத்தினர், போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) மாவட்ட செயலாளர் அன்பு கூறுகையில், ''தாராபுரத்தில் மதுக்கடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை மாமூலாக தி.மு.க., நகர செயலாளர் கேட்டார். சி.ஐ.டி.யு., சார்பில் கூட்டம் நடத்தி, கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். இதற்காக, சங்க தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் கனகராஜ் ஆகியோரை எவ்வித முகாந்திரமும் இல்லாமல், வெகு துாரத்துக்கு மாற்றி னர். இதுபற்றி, 'டாஸ் மாக்' மாவட்ட மேலாளரிடம் கேட்ட போது, 'இடமாற்ற விஷயமே எனக்கு தெரியாது,' என்கிறார். இப்பிரச்னைக்கு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க உள்ளோம்,'' என்றார்.