/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசாரிடம் குறைகேட்பு ; மாநகர கமிஷனர் அறிவிப்பு
/
போலீசாரிடம் குறைகேட்பு ; மாநகர கமிஷனர் அறிவிப்பு
போலீசாரிடம் குறைகேட்பு ; மாநகர கமிஷனர் அறிவிப்பு
போலீசாரிடம் குறைகேட்பு ; மாநகர கமிஷனர் அறிவிப்பு
ADDED : நவ 22, 2025 06:38 AM
திருப்பூர்: போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவில் இன்று கருத்து மற்றும் குறை கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக போலீஸ் கமிஷன் ஆண்டு தோறும் குறைந்த பட்சம் இரு முறை, மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் பிரிவில், ஓபன் ஹவுஸ் என்ற பெயரில் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பிரிவு வாரியாக பணியாற்றும் போலீசாரை பங்கேற்க வைக்க வேண்டும்.
இதில், சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு, குற்றங்கள் கட்டுப்படுத்துதல் தொடர்பான கருத்துகளை, கள அளவில் பணியாற்றும் போலீசாரிடம் கேட்டுப் பெற வேண்டும்.
அதேபோல் அவர்கள் குறைகள் குறித்தும் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இதை மேற்கொண்டு அது குறித்த விளக்கமான அறிக்கையை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவில் ஓபன் ஹவுஸ் மீட்டிங் நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர் முன்னிலையில் இக்கூட்டம் இன்று நடக்கிறது.

