/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரின் எல்லைகள் கழிவு குவிப்பால் 'நாறுது' கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
நகரின் எல்லைகள் கழிவு குவிப்பால் 'நாறுது' கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நகரின் எல்லைகள் கழிவு குவிப்பால் 'நாறுது' கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நகரின் எல்லைகள் கழிவு குவிப்பால் 'நாறுது' கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மே 18, 2025 10:51 PM

உடுமலை, ; உடுமலை நகராட்சி எல்லையான, பொள்ளாச்சி ரோட்டின் இரு புறமும், குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றமும், சுகாதார கேடும் நிலவுகிறது.
உடுமலை நகரின் எல்லையில், பொள்ளாச்சி ரோடு பகுதியில், ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் துறை அலுவலகங்கள், ஒழுங்கு முறை விற்பனை கூடம், எரிவாயு மயானம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த ரோட்டில், உடுமலை நகரில், தங்கம்மாள் ஓடை முதல், முக்கோணம் வரை, பல கி.மீ.,துாரத்திற்கு, ரோட்டின் இருபுறமும், குப்பைகள், பிளாஸ்டிக், துணி கழிவுகள், மாடு, கோழி, ஆடு என இறைச்சி கழிவுகள் மற்றும் ஆபத்தான ரசாயன கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது.
மின் மயானம், வணிக நிறுவனங்களுக்கு செல்லும் மக்கள், துர்நாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
ரோட்டின் இருபுறமும் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளால், துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்படுகிறது. கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியாகவும் உள்ளதால், நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளும் இங்கு கொட்டி தீ வைக்கப்படுகிறது.
பிரதான ரோடு முழுவதும், கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், நகருக்குள் துர்நாற்றத்துடன் நுழையும் அவல நிலை உள்ளது. அதே போல், ராஜவாய்க்கால், தங்கம்மாள் ஓடை பகுதிகளில், நேரடியாக கழிவுகள் கொட்டப்படுவதால், மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல வழியின்றி, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
அதே போல், தாராபுரம் ரோட்டில், புதிய பைபாஸ் ரோடு வரையிலும், தளி ரோடு, பழநி ரோடு, திருப்பூர் ரோடு பகுதிகளிலும், நகர எல்லைகளில் கழிவுகள் கொட்டப்படுகிறது. எனவே, பிரதான ரோடுகளில் அபாயகரமாக கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், முழுமையாக அவற்றை அகற்றவும், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.