/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவில் இன்ஜி., அசோசியேஷன் 26வது நிர்வாகக்குழு தேர்தல்
/
சிவில் இன்ஜி., அசோசியேஷன் 26வது நிர்வாகக்குழு தேர்தல்
சிவில் இன்ஜி., அசோசியேஷன் 26வது நிர்வாகக்குழு தேர்தல்
சிவில் இன்ஜி., அசோசியேஷன் 26வது நிர்வாகக்குழு தேர்தல்
ADDED : மார் 26, 2025 11:33 PM

திருப்பூர்; திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், 26வது நிர்வாகக்குழு (2025 - 26) தேர்தலில், குமார் சண்முகம் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.
திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், கடந்த, 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், 278 இன்ஜினியர்கள் உறுப்பினராக உள்ளனர். சங்கத்துக்கு, ஆண்டுதோறும் புதிய நிர்வாகக்குழு தேர்வு நடந்து வருகிறது. அதன்படி, 26 வது நிர்வாகக்குழு தேர்தல், 24ம் தேதி நடந்தது.
மங்கலம் ரோடு, சங்க அலுவலகத்தில் நடந்த தேர்தலில், முன்னாள் நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ்குமார், மணிகண்டன் தேர்தல் அலுவலராக செயல்பட்டனர். பட்டய தலைவர் சிதம்பரம், முன்னாள் தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது.
இரு வேறு அணிகளாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சங்க உறுப்பினர்கள், ஓட்டுச்சீட்டில், தங்களது வாக்கை பதிவு செய்தனர். ஓட்டு எண்ணிக்கையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட குமார் சண்முகம், 136 ஓட்டுக்களுடன் வெற்றி பெற்றார். செயலாளராக போட்டியிட்ட ராஜசேகரன், 129 ஓட்டுகளும், பொருளாளராக போட்டியிட்ட சதீஷ்பாபு 125 ஓட்டுகளும், துணைத்தலைவராக போட்டியிட்ட ராதாகிஷ்ணன் 149 ஓட்டுகளும், துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சரவணக்குமார், 132 ஓட்டுக்களும் பெற்று, வெற்றி பெற்றனர். உடனடி முன்னாள் தலைவராக அருண் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இதுதவிர, 22 பேர் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக்குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, தேர்தல் அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர். விரைவில், புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு விழா நடக்குமென, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.