/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா
/
கட்டட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா
ADDED : ஏப் 16, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் 2025--26ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பணியேற்பு விழா திருப்பூர், கணியாம்பூண்டியில் நடந்தது.
புதிய தலைவராக மோகன்ராஜ், செயலாளராக ராஜாகுமார், பொருளாளராக செந்தில்குமார், துணை தலைவராக குழந்தைகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை சங்கர் அசோசியேட்ஸ் முதன்மை கட்டட நிபுணர் ரமணி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருப்பூர் கைலாஷ் குரூப் தயாளால் பட்டேல் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
பணியேற்பு விழாவை தொடர்ந்து புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரை அறிமுகம் செய்து கவுரவப்படுத்தினர்.