தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வணிக வளாக கட்டுமான விவகாரம் ஒப்பந்ததாரர்கள் இடையே 'மோதல்'

வணிக வளாக கட்டுமான விவகாரம் ஒப்பந்ததாரர்கள் இடையே 'மோதல்'

வணிக வளாக கட்டுமான விவகாரம் ஒப்பந்ததாரர்கள் இடையே 'மோதல்'


ADDED : மார் 18, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:அவிநாசி பேரூராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பார்க் கிங் வசதியுடன் கூடிய வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த, 2022ல் பூமி பூஜையுடன் துவங்கப்பட்ட வணிக வளாக கட்டடப்பணி இழுபறியாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ, 80 சதவீதப் பணிகள் முடிந்த நிலையில் கடந்த எட்டு மாதமாக பணிகள் நடைபெறவில்லை.

வணிக வளாக கட்டட பணி ஒப்பந்தத்தை எடுத்த ஒப்பந்ததாரர் வராத தால் பணிகள் தேக்கம் அடைந்தது. மேலும் பணிகள் முடித்துக்கொடுத்த மின்சார வேலைகளை செய்தவர்களுக்கும், அடித்தளம் மற்றும் முதல் தளம் ஆகிய வற்றில் சிமென்ட் கான்கிரீட் வேலை பார்த்தவர்களுக்கும் பெருமளவில் பாக்கி வைத்துள்ளதாக கூறப்பட்டது.

நேற்றுமுன்தினம் ஒப்பந்ததாரர் வேறு கட்டட கான்ட்ராக்டர்கள் மூலம் இரண்டாம் தளத்தின் மேல் பகுதியில் கான்கிரீட் பூச்சு பூசுவதற்கும், பிற வேலைகளை செய்வதற்கும் ஆட்களையும் அதற்கு உண்டான கட்டட கட்டுமான பொருட்களையும் கொண்டு வந்து இறக்கியுள்ளார்.

பழைய ஒப்பந்ததாரர் மருதாசலம் மற்றும் கட்டட தொழிலாளர்கள் லாரியை கொண்டு வந்து கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப் பட்டிருந்த இடத்தில் நிறுத்தி ஒப்பந்ததாரர் மாரியப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'ஒப்பந்தப்படி பணிகள் முடித்துக் கொடுத்ததற்கு உண்டான தொகையான, 9.65 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு கட்டடப் பணிகளை மேற்கொள்ளட்டும்,' என மருதாசலம் கூறினார்.

தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உள் ளிட்டோர் இரு தரப்பினர் இடையே, பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், கான்கிரீட் ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் பணிகள் நடைபெற ஒத்துழைப்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us