/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செம்மொழி நாள் கட்டுரை - பேச்சுப்போட்டி
/
செம்மொழி நாள் கட்டுரை - பேச்சுப்போட்டி
ADDED : ஏப் 18, 2025 06:59 AM
திருப்பூர்; முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன், 3ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள், மே, 9ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், 10ம் தேதியும் நடைபெற உள்ளன. திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதத்துடனும், கல்லுாரி மாணவர்கள், முதல்வர் அல்லது துறை தலைவரின் பரிந்துரை கடிதத்துடனும் வரும், 30ம் தேதிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் விண்ணப்பிக்கவேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 93614 61882, 87606 06234 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.