/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனம், நீரோடை பகுதியில் துாய்மைப்பணி
/
வனம், நீரோடை பகுதியில் துாய்மைப்பணி
ADDED : செப் 30, 2024 11:16 PM

உடுமலை ஏழுமலையான் கோவில் அருகே, தன்னார்வலர்கள் வனத்துாய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
புரட்டாசி மாதத்தையொட்டி, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடக்கிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு செய்ய சென்றுவருகின்றனர்.
அப்பகுதியில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் துாய்மைப்பணி நடந்தது.
உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். உடுமலை - மூணாறு ரோட்டில் உள்ள ஒன்பதாறு செக்போஸ்ட் முதல், ஏழுமலையான் கோவில் வரை பக்தர்கள் பயன்படுத்தி விட்டுச்சென்ற பிளாஸ்டிக் கவர்கள், கண்ணாடி பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, துாய்மைப்படுத்தப்பட்டது. இதில், 25 மூட்டை வரை கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
கிணத்துக்கடவு:துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொது வெளியில் உள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு அரசு சார்பில் சுத்தம் செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியை சேர்ந்த, 50 என்.சி.சி., மாணவர்கள் மற்றும் 20 என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மாமாங்கம் நீரோடை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பையை அகற்றம் செய்து சுத்தம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் துவக்கி வைத்தார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
- நிருபர் குழு -