sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்

/

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்

அரசு பள்ளிகள் தோறும் துாய்மைப்பணி அவசியம்


ADDED : மே 01, 2025 06:12 AM

Google News

ADDED : மே 01, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : அரசுப்பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் வாயிலாக, துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு துவக்கம் முதல், மேல்நிலை வரை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாதந்தோறும், அவர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. பல மாதங்கள் தாமதமாகி தான், ஊதியம் வழங்கப்படுகின்றன.

இதனால் சில பள்ளிகளில், துாய்மை பணியாளர்கள் அடிக்கடி பணிகளை புறக்கணித்து செல்கின்றனர். மேலும், குறிப்பிட்ட பணிகளை மட்டுமே பார்த்துச்செல்கின்றனர். இதனால் பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப் படுகிறது.

தற்போது முழு ஆண்டு விடுமுறை துவங்க உள்ளதால், விடுமுறை முடியும் வரை பள்ளிகளில் பராமரிப்பு பாதிக்கப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையில் , தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் வாரம் ஒருமுறை வீதம் முழு துாய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us