சீதோஷ்ண நிலையில் மாற்றம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
சீதோஷ்ண நிலையில் மாற்றம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை
ADDED : ஆக 25, 2026 04:21 PM
உடுமலை: திடீர் மழை, அதிகாலை குளிர் என சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பருவகால நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பெருகி, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் மற்றும் பருவகால நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி தெரிவித்தார்.
தண்ணீர் தேங்காமல் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், வயிற்றுவலி, முதுகுவலி, சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று பேருக்கு, டெங்கு பாதிப்பு கண்டறியப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
