/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் தனிப்பிரிவு செயல்பாடு மந்தம்! பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு
/
முதல்வர் தனிப்பிரிவு செயல்பாடு மந்தம்! பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு
முதல்வர் தனிப்பிரிவு செயல்பாடு மந்தம்! பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு
முதல்வர் தனிப்பிரிவு செயல்பாடு மந்தம்! பொதுமக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : மார் 29, 2025 05:47 AM
பொங்கலுார் : முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மக்கள் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுக்கின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், கடைசி முயற்சியாக, தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்கின்றனர்.
ஒரு சில மனுக்களுக்கு தீர்வு கிடைக்கிறது. பலருக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. அங்கிருந்து வரும் மனுக்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு சாக்கு போக்கான பதிலை சொல்லி பைலை மூடி விடுகின்றனர். புகார்தாரர்களுக்கு உங்கள் மனு ஏற்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு, 1100 ஐ அழைக்கவும் என்ற ஒற்றை வரி பதில் மட்டுமே செல்போனில் குறுந்தகவல் வருகிறது.
அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவு என எங்கு கொடுத்தாலும் வேலை செய்வது கீழ் மட்ட அதிகாரிகள் தான். அதிகாரிகள் வேலை செய்தால்தான் உண்டு.
எங்கு கொடுத்தாலும் ஒரே பதில் தான். பணம் இருந்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்த பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கும் மனுக்களுக்கு, 30 நாளில் தீர்வு காணப்படும் என்று கூறுகின்றனர். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை.
தீர்வு காணப்பட்டுள்ளது என்ற தகவலை சொல்லும் போது மனுதாரரின் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டும் என்ற விதியை சேர்க்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காமல் சாக்குப்போக்கான பதில்களை சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால் முதல்வர் தனிப்பிரிவு இருந்து எந்தவிதமான பலனும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.