/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயிற்சி முகாம்
/
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயிற்சி முகாம்
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயிற்சி முகாம்
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயிற்சி முகாம்
ADDED : நவ 13, 2024 04:16 AM
திருப்பூர், : உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் மூலம், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
படித்துக் கொண்டிருக்கும் போது, உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயாராக பயிற்சி அளித்து, ஊக்கப்படுத்தும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், மாவட்ட அளவில் உயர்தொழில்நுட்ப வசதியுடன் செயல்படும், 87 மேல்நிலைப்பள்ளிகள், உயர்கல்வி வழிகாட்டி மையங்களாக தேர்வு செய்யப்பட்டு விரைவில் பயிற்சி துவங்க உள்ளது.
இந்த மையங்களில் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கான ஆலோசனை, வழிகாட்டுதல்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும். இதில், பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களது விருப்பத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.
முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கும், அதனை தொடர்ந்து மாணவர்களுக்கும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவ., 3வது வாரத்தில் மைய விவரங்கள், பயிற்சி விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.