/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்
/
ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்
ADDED : டிச 10, 2025 09:03 AM

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, 1,906 கிலோ எடையுள்ள, 4,204 தேங்காய்களை, 13 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
6 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ. 54 க்கும், குறைந்த பட்சமாக, ரூ. 46 என சராசரியாக, ரூ. 50 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 97 ஆயிரத்து, 524 ஆகும். அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 8 விவசாயிகள், 8 மூட்டை அளவுள்ள, 131 கிலோ இரண்டாம் தரம் கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.
இதில், 6 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.184 க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.140 என, சராசரியாக, ரூ.160க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 18 ஆயிரத்து, 907 ஆகும், என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

