/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ADDED : ஜூலை 04, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. அதிகளவு விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை தோறும், உரித்த தேங்காய் ஏலம், இ-நாம் திட்டத்தின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும், 7ம் தேதி முதல் துவங்கும், தேங்காய் ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்க்க, மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளனர்.