/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.57.89க்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.57.89க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.57.89க்கு விற்பனை
விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ.57.89க்கு விற்பனை
ADDED : டிச 16, 2025 07:35 AM

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.57.89 க்கு விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 540 கிலோ எடையுள்ள, 1,347 தேங்காய்களை, 9 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ. 57.89 க்கும், குறைந்த பட்சமாக, ரூ.35 என சராசரியாக, ரூ.52 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 27 ஆயிரத்து, 331 ஆகும்.
அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 4 விவசாயிகள், 4 மூட்டை அளவுள்ள, 258 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.
இதில், 5 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ. 206க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.131 என, சராசரியாக, ரூ.141க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 37 ஆயிரத்து, 597 ஆகும்.
மேலும், 2 மூட்டை அளவுள்ள, 32.20 கிலோ, தேங்காய் தொட்டியை, 2 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் ஏலத்தில், 5 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய தொட்டி, ரூ. 32.20க்கு விற்பனையானது, என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

