/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் தேங்காய் ஏலம்
/
விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் தேங்காய் ஏலம்
ADDED : ஜூலை 09, 2025 10:08 PM
உடுமலை; மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வரும், 14ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை தோறும், உரித்த தேங்காய் ஏலம், இ-நாம் திட்டத்தின் கீழ், மறைமுக ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவு கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், சிறியது, பெரியது என தரம்பிரித்து, காலை, 9:00 மணிக்குள் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும், விவசாய விளை பொருட்களுக்குரிய தொகை உடனடியாக வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு, திருப்பூர் மாவட்ட விற்பனை குழு முதுநிலை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு, விற்பனை குழு கண்காணிப்பாளர் 94871 59363; 87780 95875 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.