ADDED : மார் 15, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு கிலோ, 152.65, குறைந்தபட்சமாக, 103 ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம், 830 கிலோ கொப்பரை, ஒரு லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 25 விவசாயிகள் பங்கேற்றனர். தேங்காய் ஏலத்தில், முதல் தரம் ஒரு கிலோ, 51.55, இரண்டாம் தரம், 35.05 ரூபாய்க்கும், சராசரி, 47.90 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1.78 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
