/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு : ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தீர்வு காண வலியுறுத்தல்
/
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு : ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தீர்வு காண வலியுறுத்தல்
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு : ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தீர்வு காண வலியுறுத்தல்
நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிப்பு : ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 11:39 PM
உடுமலை: பல்வேறு நோய்த்தாக்குதல்களால் தென்னை சாகுபடி பாதித்துள்ள நிலையில், தென்னை வளர்ச்சி வாரியம் உரிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என தென்னை விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பரமசிவம் வரவேற்றார்.
மாநிலச்செயலாளர் விஜயமுருகன், பொருளாளர் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் முத்துராமு, அருண்பிரகாஷ் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில், தென்னை மரங்களை, வேர்ப்புழு, கருத்தலை புழு, மஞ்சள் வாடல் நோய், சுருள் வெள்ளை ஈக்கள், ஊசி புழுக்கள் என பல்வேறு நோய்கள் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தென்னை வளர்ச்சி வாரியம், தென்னையை தாக்கும் கடுமையான நோய்கள் குறித்து எந்த விதமான ஆய்வுகளும் செய்யாமல், இருந்து வருவதே, தென்னை நோய்களுக்கும், சாகுபடி பரப்பு வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ளது.
எனவே, இவ்வாரியம் தென்னையில் நோய்கள் தாக்குதல் குறித்து ஆய்வு மற்றும் தீர்வுகளுக்கான வழி காண, மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும்.
தென்னையில் நுண்ணுாட்ட பற்றாக்குறையால், பாதிப்பு ஏற்படுகிறது. மானிய விலையில், நுண்ணுாட்ட சத்துக்கள், உரம், பூச்சி மருந்துகள் வழங்க வேண்டும்.
உலக அளவில் தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதன் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரியம், காயர் போர்டு உள்ளிட்ட நிறுவனங்களில் முறைகேடுகளை தடுத்து, அனைத்து விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

