sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னை சாகுபடி விரிவாக்க திட்டம்: கன்று, நடவுக்கு மானியம்

/

தென்னை சாகுபடி விரிவாக்க திட்டம்: கன்று, நடவுக்கு மானியம்

தென்னை சாகுபடி விரிவாக்க திட்டம்: கன்று, நடவுக்கு மானியம்

தென்னை சாகுபடி விரிவாக்க திட்டம்: கன்று, நடவுக்கு மானியம்


ADDED : ஜன 16, 2025 11:31 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ;மத்திய அரசின் தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் மானிய விலையில் தென்னங்கன்றுகளும், நடவு மானியமும் வழங்கப்படுகிறது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம், கால்நடைத்தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தென்னை விவசாயம் அதிக அளவில் நடக்கிறது.

அரசும் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு செலயல்படுத்தி வருகிறது. உடுமலை, தளி திருமூர்த்திநகரில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை அமைந்துள்ளது.

இங்கு, விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.

தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து, 840 மலேசியன் பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகளும், 6,144 சவக்காடு ஆரஞ்சு குட்டை ரகங்களும், 249 மலேசியன் ஆரஞ்சு குட்டை ரகம், மேற்கு கடற்கரை நெட்டை ரகம், 23 ஆயிரம் தென்னங்கன்றுகளும் உற்பத்தி செய்து, மொத்தம், 36 ஆயிரத்து 333 தென்னங்கன்றுகள் சான்று பெற்று, விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.

தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் ரகோத்துமன் கூறியதாவது:

தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகளும், நடவு செய்ய மானியமும் வழங்கப்படுகிறது. நெட்டை ரகம் ஒரு கன்று, ரூ. 80க்கும், குட்டை ரகம் மற்றும் இளநீர் ரகம், ரூ.100க்கும் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு, 25 சென்ட் முதல், 4 ஹெக்டேர் வரை நடவு மானியம் வழங்கப்படுகிறது. நெட்டை ரகத்திற்கு, ஒரு ஹெக்டருக்கு, ரூ. 6,500, குட்டை ரகத்திற்கு, ரூ. 7,500 நடவு மானியம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், இந்த வாய்ப்பை தவறவிடாமல் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us