/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் விலை உயர்வு எதிரொலி; தென்னங்கன்று விலை அதிகரிப்பு
/
தேங்காய் விலை உயர்வு எதிரொலி; தென்னங்கன்று விலை அதிகரிப்பு
தேங்காய் விலை உயர்வு எதிரொலி; தென்னங்கன்று விலை அதிகரிப்பு
தேங்காய் விலை உயர்வு எதிரொலி; தென்னங்கன்று விலை அதிகரிப்பு
ADDED : ஜூன் 13, 2025 10:56 PM
பொங்கலுார்; கடந்தாண்டு தேங்காய்க்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கொப்பரை ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், 12 ரூபாய்க்கு விலை போனது. இதனால், கடந்தாண்டு தென்னங்கன்று நடவு செய்வதில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைவாக இருந்தது. நர்சரிகளில் தென்னங்கன்றுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன.
ஒரு கன்று, 50 ரூபாய் முதல், 75 ரூபாய் வரையே விலை போனது. ஆனால் நடப்பாண்டில் கொப்பரை விலை, 230 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தேங்காய், 30 ரூபாய்க்கு தோப்புகளில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தென்னங்கன்று நடவு செய்வதில் விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே, தென்னங்கன்று விலையும் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 50 முதல், 75 ரூபாய் வரையே தென்னங்கன்று விலை போனது.
தற்போது தென்னங்கன்று, 100 ரூபாய்க்கு விலை போகிறது.தென்னங்கன்றுகளுக்கு கிராக்கி நிலவுவதால்நர்சரி வைத்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.