தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வலுக்கட்டாய தேர்தல்; சுயேச்சை 'சுளீர்'

வலுக்கட்டாய தேர்தல்; சுயேச்சை 'சுளீர்'

வலுக்கட்டாய தேர்தல்; சுயேச்சை 'சுளீர்'


ADDED : செப் 12, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 53; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட, நேற்று வேட்பு மனு அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தாராபுரத்தில் நடக்கும் இடைத்தேர்தல், வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட தேர்தல். இதை கண்டிக்கும் விதமாக தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தல் வர காரணமாக இருந்த சட்டமன்ற உறுப்பினர், மக்களின் வாக்குரிமையை அவமானப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜினாமா செய்தது ஏன்?

தாராபுரம் தொகுதி த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்தியபாமா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

இடைத்தேர்தலில் எங்களது வெற்றி உறுதியாக்கப்பட்ட ஒன்று. நான் ராஜினாமா செய்ததால், மக்களின் ஜனநாயக உரிமையை மதிக்கவில்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. நான் ஏற்கனவே கூறியது போல, கட்சிக்குள் இருந்த உட்பூசல் மற்றும் இ.பி.எஸ்., பொறுப்பேற்றதிலிருந்து எந்த ஒரு வெற்றியும் கொடுக்க முடியவில்லை. அவரின் முடிவு தனிப்பட்டதாக இருந்தது. இதனால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தேன். இவ்வாறு கூறினார்.

தேர்தல் புறக்கணிப்பு

தாராபுரத்தை அடுத்த அம்மாபட்டி குருவப்பநாயக்கன்பாளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, நேற்று பேனர் வைத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அரசு வழங்கிய நிலத்தில் குடியிருக்கும் எங்களுக்கு, 26 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. இதுவரை நடந்த தேர்தலில் அனைத்து வேட்பாளரிடமும் நாங்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதனால் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us