/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - கயா சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்குதுங்க!
/
கோவை - கயா சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்குதுங்க!
கோவை - கயா சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்குதுங்க!
கோவை - கயா சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்குதுங்க!
ADDED : ஜன 04, 2025 12:17 AM
திருப்பூர்; கோவையில் இருந்து பீஹார் மாநிலம் கயாவுக்கு சிறப்பு ரயில் (எண்:03680) செவ்வாய்தோறும் இயங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கயாவில் இருந்து இன்று (4ம் தேதி) இரவு 7:35 மணிக்கு புறப்படும் ரயில், வரும், 6 ம் தேதி மாலை 6:30 மணிக்கு கோவை வந்து சேரும்; முன்னதாக, 6 ம் தேதி மாலை, 5:05 க்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும்.
மறுமார்க்கமாக கோவையில் இருந்து 7 ம் தேதி காலை 7:50 க்கு புறப்படும் ரயில், வியாழன் காலை 9:15 க்கு கயா சென்று சேரும். முன்னதாக, 7 ம் தேதி காலை, 8:28 க்கு திருப்பூர் ஸ்டேஷனை சிறப்பு ரயில் கடக்கும்.
பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இந்த ரயில், ஜன., 14, 28, பிப்., 4 மற்றும், 11 ம் தேதி இயக்கப்படும்.