/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரத்த தான முகாமில் 113 யூனிட் சேகரிப்பு
/
ரத்த தான முகாமில் 113 யூனிட் சேகரிப்பு
ADDED : ஜன 22, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசியில் களம் அறக்கட்டளை சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருப்பூர் தலைமை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்காக, 5வது முறையாக நடைபெற்ற ரத்த தான முகாமில்,113 ரத்த கொடையாளர்களிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தானம் அளித்த அனைவருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. ரத்தம் தானம் செய்தவர்களுக்கு கொடையாளர் சான்றிதழ் அளிக்கப்பட்டது. ரத்த தான முகாம் ஏற்பாடுகளை களம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.