/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை பெய்ய வேண்டி கூட்டு பிரார்த்தனை
/
மழை பெய்ய வேண்டி கூட்டு பிரார்த்தனை
ADDED : மார் 24, 2025 05:36 AM

அவிநாசி : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வலியுறுத்தியும், மழை பெய்ய வேண்டியும் அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சங்கமாங்குளத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. அவிநாசி சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப், அவிநாசி குளம் காக்கும் அமைப்பினர் இணைந்து தாமரைக்குளம் மற்றும் சங்கமாங்குளத்தில் உள்ள முட்செடிகள், கட்டட கழிவுகள் அகற்றி துாய்மைப்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அமைப்பு தலைவர் துரை பரிசுகள் வழங்கினார்.