/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பேட்மின்டன்' போட்டியில் கலெக்டர் - கமிஷனர் கலக்கல்
/
'பேட்மின்டன்' போட்டியில் கலெக்டர் - கமிஷனர் கலக்கல்
'பேட்மின்டன்' போட்டியில் கலெக்டர் - கமிஷனர் கலக்கல்
'பேட்மின்டன்' போட்டியில் கலெக்டர் - கமிஷனர் கலக்கல்
ADDED : செப் 20, 2024 10:54 PM

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கில், அரசு ஊழியர் ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான பேட்மின்டன் போட்டி நேற்று நடந்தது.
பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த, அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என, 145 ஆண்கள், 58 பெண்கள், தனிநபர், குழு பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர்.
கலெக்டர் - போலீஸ் அணி
அரசு ஊழியர் பிரிவு போட்டியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் இணைந்து, இரட்டையர் அணியில் பங்கேற்று விளையாடினர்.
எதிரணியில் போலீஸ் அணி வீரர்கள் பங்கேற்றனர். துவக்கம் முதலே ஆட்டம் சுறுசுறுப்பாக இருந்தது.
ஆட்டம் நிறைவில் போலீஸ் அணி, 30 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், ஆர்வமுடன் பங்கேற்று, விளையாடிய கலெக்டர், மாநகராட்சி கமிஷனரை குழுமியிருந்த விளையாட்டு ஆர்வலர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.