/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்த மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர், மேயர் திடீர் ஆய்வு
/
சித்த மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர், மேயர் திடீர் ஆய்வு
சித்த மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர், மேயர் திடீர் ஆய்வு
சித்த மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர், மேயர் திடீர் ஆய்வு
ADDED : டிச 07, 2025 06:59 AM

திருப்பூர்: புதிய விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், 40 கோடி ரூபாயில் கட்ட, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது.
பார்க்கிங் வசதிக்காக, மாவட்ட சித்த மருத்துவமனை அமைந்துள்ள இடம் கையகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளாக மருத்துவமனை, மாவட்ட அலுவலகம் செயல்படுவதால், மூன்று தலைமுறையாக முதியவர் பலர் எளிதில் வந்து செல்கின்றனர். மாவட்ட சித்த மருத்துவமனையை இடம் மாற்றுவதால், பெருத்த சிரமம் ஏற்படும்.
முடிவை கைவிட வேண்டும் என அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் மனிஷ் நாரணவரே, மேயர் தினேஷ்குமார் ஆகியோரை சந்தித்து, மாவட்ட சித்த மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மனு அளித்து வலியுறுத்தினர்.
நேற்று மதியம் மாவட்ட சித்த மருத்துவமனை வளாகம், நோயாளிகள் அறை, டோக்கன் பதியும் இடம், ஹோமியோபதி பிரிவு உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் மனிஷ் நாரணவரே, மேயர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சித்த மருத்துவ அலுவலர்கள், 'இருக்கும் நிலையை நீங்களே பாருங்கள்.
ஒட்டு மொத்தமாக எங்கு இடம் பெயர்ந்து செல்வது?' என ஆதங்கத்துடன் பேசினர்.
ஆய்வு நடத்திய குழுவினர், 'மாநகராட்சி அலுவலகம் கட்டுவது வளர்ச்சி பணி. அதற்கேற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,' என வேண்டுகோள் விடுத்தனர்.

