/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாசில்தார்கள் 'டிரான்ஸ்பர்': கலெக்டர் உத்தரவு
/
தாசில்தார்கள் 'டிரான்ஸ்பர்': கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 29, 2025 10:09 PM
உடுமலை:
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது:
திருப்பூர் வடக்கு தாசில்தாராக பணிபுரிந்து வந்த கதிர்வேல், ஊத்துக்குளி தாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தார் முருகேஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அந்த பொறுப்பில் இருந்த கண்ணாமணி, திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு, முன்னாள் தனி தாசில்தாராக இருந்த சாந்தி, நெடுஞ்சாலை (திட்டங்கள்) அலகு, நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், நிலமெடுப்பு தனி தாசில்தாராக இருந்த ராஜகுமார், பல்லடம் தனி தாசில் தாராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
பல்லடம் தனி தாசில்தாராக இருந்த தமிழ்ச்செல்வன் விடுப்பில் சென்றுள்ளார். உடுமலை தாசில்தாராக இருந்த கவுரி சங்கர், அதே இடத்தில் தனி தாசில்தாராகவும், தனி தாசில்தாராக இருந்த விவேகானந்தன், உடுமலை தாசில்தாராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.