/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிக்கு கலெக்டர் உறுதி
/
மாற்றுத்திறனாளிக்கு கலெக்டர் உறுதி
ADDED : ஜூலை 29, 2024 11:00 PM

திருமுருகன்பூண்டியை சேர்ந்த யுவராணி, 47; மாற்றுத்திறனாளி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். பாலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
உரிய கட்டண தொகையை செலுத்தியதையடுத்து, திமுருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பாலகம் பெட்டி வைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்தது. ஆனால், திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் விமலா, கோவிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி, பாலகம் அமைக்க அனுமதி மறுத்து வருகிறார்.
இதனால் மன வேதனை அடைந்த யுவராணி, கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளித்தார்; அனைத்து அரசுத்துறையினரும் அனுமதி வழங்கிய நிலையில், திருமுருகநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மட்டும் பாலகம் அமைக்க தடை போடுவது குறித்து விளக்கி கூறினார். பாலகம் அமைக்க அனுமதி அளித்து, வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுங்கள் என, முறையிட்டார். யுவராணி கூறியதை செவிமடுத்து கேட்ட கலெக்டர், ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.