தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் கலெக்டர் முகாம்

அவிநாசியில் கலெக்டர் முகாம்

அவிநாசியில் கலெக்டர் முகாம்


ADDED : ஆக 17, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே நாளை(19ம் தேதி) காலை 9:00 மணி முதல் 20-ம் தேதி காலை 9:00 மணி வரை அவிநாசி தாலுகாவில் தங்கி கள ஆய்வு மேற்கொள்கிறார்.

வரும் 19-ல் இ-சேவை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், கூட்டுறவு சங்கம், தாலுகா மற்றும் ஆர்.ஐ. அலுவலகங்களை ஆய்வு செய்யும் கலெக்டர், மதியம் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். மாலை 4:30 முதல் 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்களைப் பெறுகிறார்.

இரவு நேர ஆய்வாக அரசு விடுதிகள், பூங்கா, பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனைகளைப் பார்வையிடுகிறார். 20ம் தேதி காலை பல்வேறு ஆய்வுகளை முடித்துக் கொண்டு 9:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் திரும்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us