ADDED : டிச 23, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகியன இணைந்து தமிழ் ஆட்சி மன்ற வார விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடத்தின.
கல்லுாரி முதல்வர் முனைவர் நளதம் தலைமை தாங்கினார். 'தமிழ் மொழிக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது சங்க காலமா? சமகாலமா?' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இணை பேராசிரியர் முனைவர் ஈஸ்வரி மேனாள் நடுவராக பங்கேற்றார். பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.