/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி கபடி போட்டி; கே.பி.ஆர்., அணி வெற்றி
/
கல்லுாரி கபடி போட்டி; கே.பி.ஆர்., அணி வெற்றி
ADDED : செப் 25, 2024 10:57 PM

திருப்பூர்: கல்லுாரிகளுக்கு இடையிலான கபாடி போட்டியில், கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணி வெற்றிபெற்றது.
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி, திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில் நடைபெற்றது. கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 22 கல்லுாரி கபடி அணிகள் பங்கேற்று விளையாடின. இரண்டாவது நாளான நேற்று, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.
மொத்தம் 45 புள்ளிகளுடன் கோவை கே.பி.ஆர்., கல்லுாரி அணி, முதலிடம்; 35 புள்ளிகளுடன் எஸ்.ஆர்.எஸ்., கல்லுாரி அணி இரண்டாமிடம் பிடித்தன. அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி 28 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரி 16 புள்ளிகளுடன் நான்காமிடம் பிடித்தன.
நேற்று மாலை நடைபெற்ற விழாவில், முதலிடம் பிடித்த கே.பி.ஆர்., கல்லுாரி அணிக்கு, பரிசு கோப்பை வழங்கப்பட்டது. தமிழ்நாடு கபடி கழக பொருளாளர் சண்முகம், வெற்றிபெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.
நிப்ட்-டி கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.