தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்லுாரி ஒன்று: பெயர் பலகை இரண்டு!

 கல்லுாரி ஒன்று: பெயர் பலகை இரண்டு!

 கல்லுாரி ஒன்று: பெயர் பலகை இரண்டு!


ADDED : மார் 14, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: பெண்கள் கல்லுாரி என்றாலே திருப்பூரின் அடையாளமாக இருப்பது, எல்.ஆர்.ஜி. கல்லுாரி தான்.

சென்னை குயின்மேரீஸ் கல்லுாரிக்கு அடுத்த படியாக தமிழகத்தில் அதிகளவில் மாணவியர் (1,166) படிக்கும் ஒரே கல்லுாரியாக இக்கல்லுாரி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஐந்து மடங்கு விண்ணப்பம் (5,600 விண்ணப்பம்) கூடுதலாக வந்து குவிகிறது.

கடந்த, 1971ல் துவங்கப்பட்ட இந்த கல்லுாரியில், பட்டப்படிப்பு முடித்து, மாணவியர் பல்வேறு உயர்பொறுப்புகளில் உள்ளனர். கல்லுாரி சீரமைப்பு பணி நடந்த போது, 1989ல் கல்லுாரி முகப்பில் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லுாரி என பெயர் முகப்பில் வைக்கப்பட்டது. இன்றளவும் அந்த அறிவிப்பும், பலகையும் நல்ல நிலையில் உள்ளது.

தற்போது, அதன் அருகிலேயே, நுழைவு வாயில் இடதுபுறம், எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக்கல்லுாரி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிப்பு பலகை உள்ள நிலையில், கல்லுாரியை பற்றி முழுமையாக அறிந்து, ஆயிரக்கணக்கான மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் வரும் நிலையில், புதிய அறிவிப்பு பலகை இப்போது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்லுாரி மாணவியர், பெற்றோர் கூறுகையில், 'கல்லுாரியில் கழிப்பிடம், குடிநீர் வசதி, கேன்டீன் மேம்பாடு, மைதான பராமரிப்பு, விரிவான பார்க்கிங், தரைத்தளம் அமைப்பது உள்ளிட்ட மேம்படுத்த வேண்டிய பல்வேறு பணிகள் உள்ளது.

அதனை விட்டுவிட்டு, புதிய அறிவிப்பு பலகைக்கு நிதியை வீணாடிக்காமல் இருந்திருக்கலாம். திட்டமிடாமல் மேற்கொள்ளும் பணியால், எந்த பயனும் இல்லை,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us