ADDED : டிச 12, 2024 06:28 AM
அவிநாசி; அனுப்பர்பாளையம் புதுார், நேதாஜி நகரை சேர்ந்த சுப்ரமணி மகன் அஸ்வின், 18. திருப்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டுபடித்து வருகிறார்.
அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தை சேர்ந்த மாதையன் மகன் சந்துரு, 20. நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நண்பர்களான அஸ்வினும், சந்துருவும், கல்லுாரி விடுமுறை என்பதால், 'பார்ட் டைம்' வேலைக்கு கடந்த இரண்டு நாட்களாக சென்று வருகின்றனர். நேற்று மாலை இருவரும் டூவீலரில் அவிநாசி நோக்கி வந்துள்ளனர். அவிநாசிலிங்கம் பாளையத்தில், வேகத்தடுப்பு டிவைடரில் மோதியதில் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த சந்துரு துாக்கி வீசப்பட்டதில், கோவை நோக்கி சென்ற அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள், பலத்த காயம் அடைந்த அஸ்வினை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவிநாசி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இரண்டு மாணவர்களுக்கும் ஓட்டுனர் உரிமம் இல்லை. இருவரும் ஹெல்மெட் போடவில்லை.
