/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோஜா பூக்களுடன் வரவேற்பு கல்லுாரி மாணவியர் உற்சாகம்
/
ரோஜா பூக்களுடன் வரவேற்பு கல்லுாரி மாணவியர் உற்சாகம்
ரோஜா பூக்களுடன் வரவேற்பு கல்லுாரி மாணவியர் உற்சாகம்
ரோஜா பூக்களுடன் வரவேற்பு கல்லுாரி மாணவியர் உற்சாகம்
ADDED : ஜூலை 01, 2025 12:10 AM

திருப்பூர்,; அரசு கலைக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கப்பட்டது. முதலாண்டு மாணவியருக்கு, சீனியர் மாணவியர், பேராசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். ஆங்கிலத் துறைத்தலைவர் கீதா வரவேற்றார். 'கல்வியே கண்' எனும் தலைப்பில் விலங்கியல்துறை தலைவர் லிட்டிகொரியா, வேதியியல் துறை தலைவர் நளினி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் பேசுகையில், 'உயர்கல்வி உங்கள் வாழ்வின் அடையாளம். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை காட்டி நன்கு படியுங்கள். கல்லுாரி படிப்பை நல்ல மதிப்பெண்ணுடன் முடிப்பவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது,' என்றார். வரலாற்றுத்துறைத் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
தங்கள் மகள் முதல்முறை கல்லுாரிக்குள் செல்வதை காண பெற்றோர் பலர் கல்லுாரி வளாகத்தில் திரண்டனர். சிலர் உணர்ச்சி பெருக்கால், ஆனந்த கண்ணீருடன், மாணவியரை கல்லுாரிக்குள் அனுப்பி, விடைபெற்றுச் சென்றனர்.