ADDED : அக் 26, 2024 11:13 PM

திருப்பூர்: அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, கடந்த, 2016ம் ஆண்டு, தமிழக அரசு, மாற்றுப்பணியை, அரசு கல்லுாரிகளில் வழங்கியது. இந்த நியமனம் காரணமாக, முறையாக இட ஒதுக்கீடு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக கிடைக்க வேண்டிய பணி நியமனம் ஆசிரியர்களுக்கு தடுக்கப்பட்டது.
இதவிர, அரசு கல்லுாரிகளில் மாற்றுப்பணி அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர் பணியிடம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. இவர்களை அரசு கல்லுாரிகளில் பணி நிரந்தரம் செய்வதற்கான முயற்சி நடக்கிறது எனக்கூறி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேற்று, திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி முன், கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது. கோவை மண்டல பொறுப்பாளர்கள் கிரிஜா ஆரோக்கியமேரி, மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தனர்.
கோரிக்கையை விளக்கி, சங்க செயலர் விமலா சிறப்புரை ஆற்றினார்.