/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருகிறா ராம்... முகாமில் பங்கேற்ற மாணவர்
/
வருகிறா ராம்... முகாமில் பங்கேற்ற மாணவர்
ADDED : ஜன 22, 2024 12:48 AM

திருப்பூர்:தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், ஜன., 14 முதல், ஜன., 20 வரை தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடந்தது.
இதில், தமிழகம், குஜராத், ம.பி., கர்நாடகா, ஓடிசா, கேரளா, பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய, 12 மாநிலங்களில் இருந்து பல்கலை கழக வாரியாக, 210 என்.எஸ்.எஸ்., மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பங்கேற்றவர்களுக்கு யோகா, துாய்மை பாரதம், பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு, அறிவுத்திறன் மற்றும் படைப்பாற்றல் வளர்த்துவது உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகளும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலை அளவில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு - 2 மாணவர், ஜெயச்சந்திரனும் ஒருவர். முகாம் முடிந்து இன்று (22ம் தேதி) கல்லுாரிக்கு வரும் ஜெயச்சந்திரனுக்கு கல்லுாரி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக, என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தெரிவித்தார்.