/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலம்ப போட்டியில் சாம்பியன்ஷிப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
சிலம்ப போட்டியில் சாம்பியன்ஷிப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
சிலம்ப போட்டியில் சாம்பியன்ஷிப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
சிலம்ப போட்டியில் சாம்பியன்ஷிப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2025 08:39 PM

உடுமலை: மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு வித்யா நேத்ரா பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் மற்றும் ஜீவா சிலம்ப பள்ளி சார்பில், மண்டல அளவிலான சிலம்ப போட்டிகள் உடுமலையில் நடந்தது.
இதில், கோமங்கலம்புதுார் வித்யாநேத்ரா பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று அதிக வெற்றிகளை பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பெற்றனர்.
சிவஹரிணி, அவந்திகா, சாய் அச்சுதன், ஹாசிகா, தனியமாலு மற்றும் ஆதித்யா ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
ஸ்ரீநந்தனா, மதுப்பிரீத்தா, தர்ஷன், ஹன்சிகா இரண்டாமிடமும், 10 மாணவர்கள் மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றனர். மேலும், 22 மாணவர்கள் பங்கேற்பு சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர். சிலம்பம் ஆசிரியர் நந்தகோபாலுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.