/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமூக வலைதளத்தில் அவதுாறு; போக்குவரத்து ஊழியர்கள் புகார்!
/
சமூக வலைதளத்தில் அவதுாறு; போக்குவரத்து ஊழியர்கள் புகார்!
சமூக வலைதளத்தில் அவதுாறு; போக்குவரத்து ஊழியர்கள் புகார்!
சமூக வலைதளத்தில் அவதுாறு; போக்குவரத்து ஊழியர்கள் புகார்!
ADDED : நவ 05, 2024 11:26 PM

பல்லடம்; சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடம் போலீசாரிடம், போக்குவரத்து கழக ஊழியர்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர்- -புளியம்பட்டி செல்லும் அரசு பஸ் (எண்: 30), கடந்த அக்., 30ம் தேதி, பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில் ஏறிய பெண் பயணி ஒருவர் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி, டிக்கெட் பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார். கையில் பணம் இல்லை என்று பயணி கூறியதை தொடர்ந்து, 'கூகுள்பே' வாயிலாக, 200 ரூபாய் அனுப்பினார்.
பெண்களுக்கான இலவச பஸ்சில் டிக்கெட் எடுக்காத பயணிக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, உயரதிகாரிகளின் உத்தரவின்படி, 200 ரூபாய் அபராத பணம், அப்பெண்ணுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்லடம் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
இலவச பஸ் பயணம் என்றாலும், டிக்கெட் வாங்காமல் பயணித்தது பயனியின் தவறு.கையில் பணம் இல்லை என்று கூறியதால், டிக்கெட் பரிசோதகர் வேறு வழியின்றி 'கூகுள்பே' வாயிலாக அபராத தொகையை வசூலித்தார். ஆனால், அதற்கான ரசீதையும் வாங்காமல், பயணி அவசரகதியில் சென்ற நிலையில், வசூலித்த தொகை, உடனடியாக போக்குவரத்து கழக பணிமனையில் செலுத்தப்பட்டது.
இவ்வாறு, போக்குவரத்து கழக விதிமுறையை பின்பற்றி செயல்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் மீது, நடவடிக்கை எடுத்துள்ளது கவலை அளிக்கிறது.
மேலும், இது தொடர்பாக, ஓட்டுனர், நடத்துனர் மற்றும் டிக்கெட் பரிசோதகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பிய நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.