/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவு மேலாண்மை கூட்டம் பங்கேற்க கமிஷனர் அழைப்பு
/
கழிவு மேலாண்மை கூட்டம் பங்கேற்க கமிஷனர் அழைப்பு
ADDED : டிச 16, 2025 07:35 AM
தி ருப்பூரில் இன்று நடக்க உள்ள கழிவு மேலாண்மை குறித்த கூட்டத்தில் பங்கேற்க தொழில் நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியிலுள்ள வணிக, தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்பு வளாகங்கள், தியேட்டர், கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பிற மொத்த கழிவுகள் உருவாக்குபவர்களுக்கு, (தினமும், நுாறு கிலோவுக்கு மேல் குப்பை) குப்பை மேலாண்மை செய்வது குறித்த செயல்முறை விளக்க கூட்டம் இன்று காலை, 10:00 மணிக்கு டவுன் ஹால் அரங்கில் நடக்கிறது.
இதில், மொத்த கழிவுகள் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்த கலந்தாய்வு செய்யப்பட்டு, குப்பை மேலாண்மை குறித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. இதில், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கலந்தாய்வு கூட்டத்தில் இம்மாநகராட்சி பகுதியில் உள்ள, அனைத்து தொழிற் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

