ADDED : ஏப் 11, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் ரவி, தனது தேர்தல் பிரசாரத்தை நவீன முறையில் ஒருங்கிணைக்க கியூஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
ஊத்துக்குளி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளரின் அன்றைய பிரசார இடத்தைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலக வாசலில் ஒட்டப்பட்டுள்ள இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், வேட்பாளரின் முழு அட்டவணையும் மொபைல் போனிலேயே கிடைத்துவிடுகிறது.
மேலும், இந்த விவரங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் மூலம் பகிரப்படுவதால், வேட்பாளரின் களப் பணிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது.
