தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சொகுசு காரை மறைத்த கம்யூ., வேட்பாளர்: தொழிலாளர் சங்கம் ஆட்சேபனை

 சொகுசு காரை மறைத்த கம்யூ., வேட்பாளர்: தொழிலாளர் சங்கம் ஆட்சேபனை

 சொகுசு காரை மறைத்த கம்யூ., வேட்பாளர்: தொழிலாளர் சங்கம் ஆட்சேபனை


ADDED : ஏப் 07, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: சொகுசு கார் இருப்பதை மறைத்துள்ளதாக, திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ., வேட்பாளரின் மனுவின் மீது, பனியன் பேக்டரி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலர் பாலாமணி, நேற்று ஆட்சேபனை தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில், தி.மு.க., ஆதரவு பெற்ற இந்திய கம்யூ., வேட்பாளராக ரவி போட்டியிடுகிறார். இவரது வேட்புமனுவின் இணைந்த பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் சொகுசு கார் இருப்பதை மறைத்துள்ளதாக, நேற்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்லின்போது, கட்சி நிதியில் வாங்கிய கார் தனது பெயரில் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதைய பிரமாண பத்திரத்தில், அத்தகவல் கொடுக்கவில்லை.

பனியன் பேக்டரி தொழிலாளர்கள் சங்க பொது செயலர் பாலாமணி என்பவர், இதுதொடர்பாக, நேற்று திருப்பூர் வடக்கு தேர்தல் நடத்தும் அலுவலிடம் நேற்று அளித்த மனுவில், 'இந்திய கம்யூ. வேட்பாளர் ரவியின் வேட்புமனுவின் மீது ஆட்சேபனை தெரிவிக்கிறேன். அவரது பிரமாண பத்திரத்தில், டி.என்.39.சிஎல்.2363 என்ற சொகுசு கார், அவர் பெயரில் இருப்பதை மறைத்துள்ளார். சொத்து விவரத்தை தவறாக அளித்துள்ளார். எனவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

பாலாமணி கூறுகையில், ''எனது மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாஷ், 'ஆட்சேபனை இருந்தால், வேட்புமனு தாக்கல் நடந்த நாட்களில் தாக்கல் செய்திருக்க வேண்டும்; தற்போது வேட்புமனு பரிசீலனை முடிந்துவிட்டது. தேவைப்பட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரலாம்' என்று தெரிவித்துள்ளார். அதன்படி வழக்கு தொடர்வேன்,'' என்றார்.

இந்திய கம்யூ., வேட்பாளர் ரவியிடம் கேட்டபோது, ''என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் தவறான புகார் அளித்துள்ளனர். நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது, கட்சி நிதியில், எனது பெயரில் கார் வாங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மாறியதும், புதிய மாவட்ட செயலாளர் பெயருக்கு மாற்றம் செய்ய, ஒப்புதல் பத்திரம் வழங்கி விட்டேன். அதனால், அவ்விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. எந்த விவரத்தையும் நான் மறைக்கவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us