/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடைவீதியான பஸ் ஸ்டாண்ட்: இடமின்றி பயணியர் அவதி
/
கடைவீதியான பஸ் ஸ்டாண்ட்: இடமின்றி பயணியர் அவதி
ADDED : மார் 03, 2024 08:44 PM
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, சுற்றுப்பகுதி கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்டில், ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளன.
வணிக வளாகத்திலுள்ள கடைகள் விதிமுறை மீறி, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதோடு, உள்வாடகைக்கும் கடைகளை விட்டுள்ளனர்.
பயணியர் காத்திருக்க அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பஸ்கள் நிற்கும் ரேக்குகளில், நுாற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணியர் நடந்து செல்ல முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பஸ்கள் வரும் வழித்தடம் உட்பட, பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும், கடைகள் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை. முறைகேடாக கடைகளுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.
இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் விதிமுறை மீறிய கடைகளாக காட்சியளிக்கிறது. பஸ் ஸ்டாண்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

