UPDATED : ஆக 06, 2026 05:55 PM
ADDED : ஆக 06, 2026 05:31 PM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி 2011-ல் விரிவுபடுத்தப்பட்டபோது, வீரபாண்டி ஊராட்சியில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் விக்டர் ஆரோக்கியராஜ் உள்பட நால்வருக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்ததையடுத்து, கோவை தொழிலாளர் நல நீதிமன்றம் நால்வரையும் மீண்டும் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநகராட்சி தாக்கல் செய்த வழக்கிலும், சென்னை ஐகோர்ட் அந்த உத்தரவை உறுதி செய்தது. இருப்பினும் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படவில்லை.
விக்டர் ஆரோக்கியராஜ் ஓய்வு பெறும் வயதான 60 வயதை எட்டியதால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த இயலாது என்பதால் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி சார்பில் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
