/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு! கிராமசபை தீர்மானம் ஏற்கப்படுமா?
/
ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு! கிராமசபை தீர்மானம் ஏற்கப்படுமா?
ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு! கிராமசபை தீர்மானம் ஏற்கப்படுமா?
ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு! கிராமசபை தீர்மானம் ஏற்கப்படுமா?
ADDED : அக் 09, 2024 12:30 AM
திருப்பூர் : வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், வளர்ப்பு ஆடுகளை தெரு நாய்கள் கடிக்கின்றன; நாய்களின் விரட்டலுக்கு பயந்து ஓடும் ஆடுகள் சில இறந்தும் விடுகின்றன.
'அவ்வகையில், இதுவரை 157 ஆடுகள் இறந்த நிலையில், இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக குண்டடம், புஞ்சை தளவாய்பாளையம் உட்பட பல ஊராட்சிகளில், சமீபத்தில் நடந்த கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'விவசாயிகளுக்கு வெறிநாய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பிற்கு உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சி மன்ற நிதியில் இருந்து இழப்பீடு தொகை வழங்க அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கிராமசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தெரு நாய்கடியால் இறந்த ஆடுகளுக்கு ஊராட்சி நிதியில் இருந்து இழப்பீடு வழங்கும் தீர்மானத்துக்கும், அரசு அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.